பாஜக போடும் ஸ்கெட்ச்; அடுத்த குறி அமைச்சர் நேரு? ED ரெய்டால் பரபரப்பு
அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அவரது மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினறுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் அவரது ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். இதற்கிடையில் மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகம் வந்துள்ளார். அவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ED ரெய்டு
முன்னதாக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. அதன்படி டாஸ்மாக் தொடர்பான சட்டவிரோத விவகாரங்களில் டாஸ்மாக் நிறுவனம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள்,
பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள், டாஸ்மாக் ஊழியர்கள், மற்றும் இதில் தொடர்புடைய பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர். இவ்வாறு ஏற்கனவே செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில்,
தற்போது கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென்று சோதனை மேற்கொண்டு வருவது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.