கடப்பரை கொண்டு அமைச்சர் துரைமுருகன் அறையை உடைத்த அதிகாரிகள் - சிக்கிய முக்கிய ஆவணங்கள்!
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
அமைச்சர் துரைமுருகன்
வேலூர் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் மகன் எம்.பி கதி ஆனந்த் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார்.
ED ரெய்டு
எம்.பி கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். வீட்டின் உள்ளே இருக்கும் அமைச்சர் துரைமுருகனின் அறை பூட்டியிருந்ததால், கடப்பாரை, சுத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு உடைத்து சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது.
நள்ளிரவு 1.20 மணியளவில் சோதனை நிறைவடைந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர். இந்த ரெய்டு காரணமாக அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன்பு திமுகவினர் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.