செந்தில் பாலாஜி தம்பியின் பங்களா வீடு - அதிகாரிகள் திடீர் சோதனை!
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியுள்ளனர்.
சகோதரர் அசோக்குமார்
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சங்கர் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர்.
திடீர் சோதனை
இதற்கிடையில், தற்போது கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
2 காரில் வந்த 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.