இந்த 5 இடங்களில் ED சோதனை - காலையிலேயே பரபரப்பு

Chennai Enforcement Directorate
By Sumathi May 06, 2025 04:11 AM GMT
Report

பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அசோக் நகரில் உள்ள என்சி எஸ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

enforcement dictorate

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனம் மருத்துவத்துறை சார்ந்த உபகரணங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

பரபரப்பு

இதேபோன்று விருகம்பாக்கம், சாலிகிராமம், தி. நகர், கோட்டூர்புரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடக்கிறது. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த 5 இடங்களில் ED சோதனை - காலையிலேயே பரபரப்பு | Ed Raid More Than 5 Locations In Chennai

இந்த நிறுவனங்களில் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.