செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை - திமுகவினர் அதிர்ச்சி!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ஆதரவாளர்கள்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த வீரா சாமிநாதனுக்கு சொந்தமான வீடுகளில் மொத்தம் 18 மணிநேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர், அது இன்று காலை தான் நிறைவடைந்தது.
தற்பொழுது இதனை தொடர்ந்து, கரூர் மற்றும் கோவையிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனை
இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் கரூர் - கோவை சாலையில் உள்ள வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள இளந்தளிர் பைனான்ஸ் நிதி நிறுவனம் செந்தில் பாலாஜியின் உதவியாளரான சங்கருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. கோவையில் மொத்தம் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் . தொடர்ந்து, கோவை, ராமநாதபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை பூர்வீகமாக கொண்ட இவர் கோவையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு காட்டியுள்ளார், தற்பொழுது அவரது வீட்டில் இருந்த கோப்புகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து நடந்து வரும் இந்த சோதனைகளால் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.