செந்தில் பாலாஜி தம்பியின் பிரம்மாண்ட புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு - பரபரப்பு!
அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறது.
செந்தில் பாலாஜி கைது
சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் இறுதியில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து, நேற்று அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜியை ஒப்படைக்க கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் தற்பொழுது அமலாக்கத்துறையின் கஸ்டடியில் உள்ளார்.
சோதனை
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே மாதம் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடிய திமுகவினர் வருமான வரித் துறை அதிகாரிகளை உள்ளே விடாமல் வாக்குவாதம் செய்தனர்.
அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டில் சோதனை நடந்தது, அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்பொழுது கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ராம்நகர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் பிரமாண்டமாக கட்டி வரும் புதிய வீட்டில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு சூழல் நிலவியது.