ஒரு மணி நேரம் தாண்டிய விசாரணை..!! அமைச்சர் பொன்முடியை விடாத ED !!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாகக்த்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ED விசாரணை
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை சட்ட விரோத பண பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக இன்று அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதன் அடிப்படையில் அமைச்சர் பொன்முடி ஆஜராகியிருக்கின்றார்.
வழக்கின் பின்னணி
கடந்த 2006-11ஆம் ஆண்டின் திமுக ஆட்சியில் கனிமவளத்துறையை இலாகாவை கவனித்த தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில் நடந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட அதனை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை துவங்கியது. அதில், கடந்த ஜூலை 18ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லம், விழுப்புரத்தில் உள்ள கவுதம சிகாமணியின் இல்லம், விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா பொறியியற் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.