சிக்கலில் நடிகை தமன்னா..தேடி வந்த அமலாக்கத்துறை - 5 மணி நேரம் என்ன நடந்தது?
நடிகை தமன்னாவிடம் அமலாக்குத்துறையினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தமன்னா
ஒரு மொழியில் தொடர்ந்து சில வருடங்கள் முன்னணி கதாநாயகியாக இடத்தை தக்கவைத்து கொள்வதே கடினம். ஆனால், தமிழ் தெலுங்கு என 2 மொழிலும் 10 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நாயகியாக இருக்கிறார் தமன்னா.
தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இருக்கும் பல நடிகர்களின் படத்திலும் கதாநாயகியாக நடித்து விட்டார். இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. எனவே அவர் பாலிவுட் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில்,தற்போது தமன்னா ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக Fairplay என்ற செயலி ஒளிபரப்பியது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதரான தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அமலாக்குத்துறை
அந்த செயலியில் ஐபிஎல் போட்டியைப் பார்க்க ஊக்குவித்ததாக தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 'எச் டி இஸட் டோக்கன்' என்ற நிறுவனம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய நிலையில், அமலாக்கத்துறை ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த சூழலில் சம்மன் அனுப்பியதின் அடிப்படையில், பெற்றோருடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று பிற்பகல் தமன்னா ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.