படங்களில் நெருக்கமாக நடிக்கும் போது...நடிகர்கள் அப்படி தான்!! தமன்னா ஓபன் டாக்
நடிகை தமன்னா இந்திய அளவில் முக்கிய நாயகியாக வளம் வருகிறார்.
தமன்னா
ஒரு மொழியில் தொடர்ந்து சில வருடங்கள் முன்னணி கதாநாயகியாக இடத்தை தக்கவைத்து கொள்வதே கடினம். ஆனால், தமிழ் தெலுங்கு என 2 மொழிலும் 10 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நாயகியாக இருக்கிறார் தமன்னா.

தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இருக்கும் அநேக நடிகர்களின் படத்திலும் கதாநாயகியாக நடித்து விட்டார். இவர் தற்போது ஹிந்தியில் ஸ்திரி 2 படத்தில் நடித்து வருகிறார்.
அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் பிஸியாக இருக்கிறார் தமன்னா. படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில் இருந்தும் தள்ளிநிற்காத தமன்னா, அண்மையில் lust stories 2 என்ற படத்தில் அவரின் காதலரான விஜய் வர்மாவுடன் படுக்கையறை காட்சியிலும் நடித்திருந்தார்.
அப்படி நடிக்கும் போது
இந்நிலையில் தான், நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் தமன்னா.

இது குறித்து அவர் பேசும் போது, அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை என தெரிவித்து நடிகைகளை விட அதிகளவில் நடிகர்களே பதட்டமாகவும் சங்கடமாக இருப்பதை தான் உணர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உடன் நடிக்கும் நடிகைகள் என்ன நினைப்பார்கள் என்று தான் அவர்களுக்கு தோன்றும் என்றும் அவர்களுக்கு இது போன்ற நிறைய கேள்விகள் இருக்கும் என்றும் கூறினார்.      
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    