டி.டி.வி தினகரனை திவாலானவராக அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை - மூத்த வக்கீல் தகவல்!

Tamil nadu T. T. V. Dhinakaran
By Vinothini Aug 12, 2023 04:56 AM GMT
Report

அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரனை திவாலானவராக அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனு தாக்கல்

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ். பார்த்திபன், இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அதனால் அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநர் கடந்த 1998 பிப்ரவரி 6-ம் தேதி உத்தரவிட்டார்.

ed-action-to-declare-ttv-dhinakaran-insolvent

ஆனால் டிடிவி தினகரன் அந்த தொகையை செலுத்தவில்லை, இதனால் அந்த ரூ.31 கோடியை வசூலிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

அமலாக்கத்துறை நடவடிக்கை

இந்நிலையில், இந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், "டி.டி.வி. தினகரனிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குநர் நடவடிக்கை எடுத்தார்.

ed-action-to-declare-ttv-dhinakaran-insolvent

இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார். மேலும், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்ததால் இந்த வழக்கை முடித்து வைக்கிறோம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.