இளம்பெண்களை துரத்திய இளைஞர்கள்.. நள்ளிரவில் அத்துமீறிய பயங்கரம் -அதிர்ச்சி வீடியோ!
நள்ளிரவு காரில் சென்ற பெண்களை இளைஞர்கள் மற்றொரு காரில் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஈசிஆர்
சினிமாவில் தான் ஹீரோ வில்லனையோ அல்லது ஹீரோயினை தான் காரில் துரத்துவதை பார்த்து இருக்கிறோம். அதே போல் சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு 3க்கு மேற்பட்ட இளம்பெண்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக மற்றொரு காரில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.
திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை பின்புறம் எடுத்த வேகமாக மாற்றுப் பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்களை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது.
துரத்திய சம்பவம்
தொடர்ந்து அந்த இளம்பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர். இந்த சம்பவத்தை காரில் இருந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து காரில் பெண்களைத் துரத்திய இளைஞர்கள் மீது 4பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
பிரதேச சபை பெண் உறுப்பினர்களை தாக்கும் பாணியில் சென்ற அர்ச்சுனா : வேடிக்கை பார்த்த காவல்துறை IBC Tamil
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan