மின்சாரம் தாக்கி மாணவன் பலி - அரசு பள்ளியில் நடந்த சோகம்

Death Sivagangai School Incident
By Karthikraja Jan 24, 2025 06:00 PM GMT
Report

 அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்துள்ளார்.

விசாரணை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பொய்யாவயல் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கைலாசம் என்பவரின் மகன் சக்திசோமையா (14) 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

karaikudi

இன்று(24.01.2025) பள்ளியில் உள்ள கணினி ஆய்வகத்தில் கணினியை இயக்குவதற்காக பிளக்கை மாட்டியபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

உயிரிழப்பு

உடனடியாக பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மாணவனை காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சாக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

karaikudi government hospital

மாணவன் உயிரிழந்ததை கேள்விப்பட்ட அவரின் உறவினர்கள், இதற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துமனையில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காரைக்குடி வட்டாட்சியர் ராஜாவும் விசாரணை நடத்தி வருகிறார்.