கன மழை எதிரொலி - கல்வி நிலையங்களுக்கு விடுமுறை..!
அசாம் மாநிலத்தில் கன மழை பெய்யக்கூடும் என்பதால் கல்வி நிலையங்களை மூடும் படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்த விதிவிலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு கம்ரூப் மாவட்ட பேரிடர் மேலாண் கழகத்தின் துணை ஆணையாளர் மற்றும் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.