இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
TN Weather
By Swetha Subash
நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்,
“தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மேலும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்.
வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளது