பாலியல் உறவு: பரவிய வைரஸ்.. அடுத்தடுத்து 19 பேர் பலி - ஆடிப்போன WHO!
வைரஸ் பரவலால் அடுத்தடுத்து 19 பேர் பலியான சம்பவத்தால் உலக சுகாதார மையம் அதிர்ச்சியடைந்துள்ளது.
எபோலா வைரஸ்
1976ம் ஆண்டில் காங்கோவில் எபோலா எனும் வைரஸ் பரவ தொடங்கியது. கடந்த 20 வருடங்களாக ஆப்ரிக்காவில் இந்த வைரஸ் அடிக்கடி பரவி வருகிறது. மனிதர்களின் ரத்தம், எச்சில், வாந்தி, முத்தம், விந்து அணு ஆகியவை மூலம் இந்த வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில்தான் தற்போது உகாண்டாவில் இந்த வைரஸ் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் தற்போது லாக்டவுன் போடப்பட்டு உள்ளது. இந்த திடீர் பரவல் காரணமாக உலக சுகாதார மையம் அதிர்ச்சியடைந்துள்ளது.
19 பேர் பலி
அங்கு 54 பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 19 பேர் இந்த வைரஸ் காரணமாக அங்கு பலியாகிவிட்டனர். சூடான் நாட்டு வகை எபோலா வைரஸ் தற்போது அங்கு பரவி வருவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
பலர் பாதுகாப்பற்ற முறையில் அங்கு பாலியல் உறவு கொள்வதால், விந்தணு மூலம் அதிக அளவில் அங்கே நோய் பரவி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த அறிகுறி ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பதற்றம் உண்டாகியுள்ளது.