SRH vs CSK போட்டி நடக்குமா..? மைதானத்தின் EB பில் இன்னும் கட்டல - தவிக்கும் ரசிகர்கள்

Chennai Super Kings Sunrisers Hyderabad IPL 2024
By Karthick Apr 05, 2024 11:05 AM GMT
Report

இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஹைதராபாத் மைதானத்தில் மோதவுள்ளன.

ஐபிஎல் தொடர்

தேர்தல் சூட்டை தாண்டி, நாட்டில் தீவிரமாக ஐபிஎல் ஜூரமும் தோற்றி கொண்டுள்ளது. இது வரை நடைபெற்றுள்ள போட்டிகளில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் 2-வது இடத்திலும், சென்னை அணி 3-வது இடத்திலும் உள்ளது.

eb-bill-issue-will-srh-csk-match-happen-today

3-வது வெற்றியை குறிவைத்து ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

போட்டி நடக்குமா..?

போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹைதராபாத் மைதானத்தின் மின்கட்டணத்தை சுமார் 7 ஆண்டுகளாக அவ்வப்போது சில கோடி ரூபாய் பாக்கி உள்ளது.

eb-bill-issue-will-srh-csk-match-happen-today

இன்னும் பாக்கியாக 1.63 கோடி ரூபாய் இருப்பதாக கூறப்படும் நிலையில், நேற்று சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மின் துணைப்பு ஏற்பட்டுள்ளது.

eb-bill-issue-will-srh-csk-match-happen-today

அதனை தொடர்ந்து தான், ஹைதராபாத் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுளள்ளனர். பேச்சுவார்த்தியில் மீதி பணத்தை கட்ட ஒருநாள் கால அவகாசத்தை ஹைதராபாத் நிர்வாகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போட்டிக்கு எந்த வித தடையும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.