மிக்ஜாங் புயல் - 4 மாவட்டங்களுக்கு டிசம்பர் மாத மின் கட்டணம் - அரசின் அதிரடி முடிவு..?
மிக்ஜாங் புயலின் காரணமாக இந்த மாதத்திற்கான மின் செலவு கணக்கீடு இன்னும் பெரும்பாலான இடங்களில் நடைபெறவில்லை.
மிக்ஜாங் புயல்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் இயல்பு நிலையை மிக்ஜாங் புயல் பெரிதாக பாதித்துள்ளது. மீட்புப்பணிகள் துரிதப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பணியில் அரசு பெரும் முனைப்பினை காட்டியது.
நிவாரண அறிவிக்கப்பட்டு நிலை சீராகி வரும் நிலையில், இம்மாத மின்சார கட்டணம் செலுத்த அவகாசத்தை நீட்டித்து தேதியை அறிவித்தது. ஆனால், மேலும் ஒரு சிக்கல் இந்த விவகாரத்தில் எழுந்துள்ளது.
முக்கிய அறிவிப்பு
அதாவது, வெள்ள நீர் சூழந்ததாலும், துண்டிக்கப்பட்ட, சரிவர பணிசெய்த மின் இணைப்புகளை சீர் செய்வதில் மும்முரம் காட்டியதால் 4 மாவட்டங்களின் பெருமபாலான இடங்களில் மின் உபயோக கணக்கீடு எடுக்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து தான் தற்போது அரசு, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் மாத கணக்கீட்டின்படியே மின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.