அடிக்குற வெயிலுக்கு பிரியாணி சாப்பிட்டால் என்னவாகும்?? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்

Tamil nadu Summer Season Biriyani
By Karthick Apr 26, 2024 10:16 PM GMT
Report

கோடை வெயில் மக்களை பெரிதும் வாட்டி வதைத்து வருகின்றது.

கோடை வெயில்

தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்துள்ளது. சீசன் துவங்கியவுடன் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். வெயிலின் தாக்கத்தின் காரணமாக, மத்திய நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையே நிறுத்திவிட்டனர்.

eating-biryani-in-summer-season-doctor-advice

வெயிலின் காரணமாக, அனல் காற்று வீசி வருகிறது. மாநிலத்தின் பல இடங்களிலும் வெயில் சதத்தை கடந்து வாட்டி எடுத்து வருகின்றது மக்களை. வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கைகளை மக்களுக்கு அளித்துள்ளது.

சுட்டெரிக்க போகும் கோடை வெயில்..தற்காத்து கொள்ள என்ன செய்யலாம்..? சில டிப்ஸ் இதோ

சுட்டெரிக்க போகும் கோடை வெயில்..தற்காத்து கொள்ள என்ன செய்யலாம்..? சில டிப்ஸ் இதோ

பிரியாணி சாப்பிட்டால்..

வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள, மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக உணவு வகைகளில் கடும் கவனம் வேண்டும் என எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

eating-biryani-in-summer-season-doctor-advice 

காரமான, சூடான உணவுகளை தவிர்த்து குளிரான உணவு வகைகளை சாப்பிடும் படியும் ,மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதே போல, பிரியாணி குறிப்பாக சிக்கன் பிரியாணி உண்வு வகைகளை ஒதுக்கும் படி மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

[0KREF7']

சிக்கன் சாப்பிட்டால் செரிமானமாக தாமதம் ஆகும் என்ற காரணத்தாலும், அது சூடு என்பதால் இந்த காலத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது சரியானதாக இருக்காது என மருத்துவர்கள்.