ஆயுத பூஜைக்கு வீட்டை சுத்தம் பண்ணப்போறீங்களா? இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
ஆயுத பூஜைக்காக வீட்டை சுத்தம் செய்ய இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
ஆயுத பூஜை
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜைக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. செய்யும் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதால் அனைத்து மதத்தினரும் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
ஆயுத பூஜையின் போது வீடு மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து வழக்கம். வீட்டை சுத்தம் செய்வது சவாலான காரியமாக இருந்தாலும், கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிமையாக சுத்தம் செய்யலாம்.
மாஸ்க் முக்கியம்
வீடுகளை சுத்தம் செய்ய துவங்கும் முன் முதலில் மாஸ்க் அணிந்து கொள்ளவும். இதனால் தூசி மூலம் ஏற்படும் சுவாச பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ஒட்டடை அடிக்கும் முன்பு படுக்கை, சோபா, டிவி போன்றவற்றை துணி கொண்டு மூடிவிடவும். பாத்திரங்கள் மீது பேப்பர்களை போட்டு மூடிவிடுவது நல்லது.
துணிகள் வைக்கும் அலமாரிகளை சுத்தம் செய்த பிறகு அதில் பச்சைக் கற்பூரம், ஜவ்வாது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இடவும். அதன் மீது காகிதத்தை விரித்து அதன் மேலே துணிகளை அடுக்கவும். இதனால், எப்போதும் நல்ல நறுமணம் இருந்து கொண்டே இருக்கும்.
கரப்பான் பூச்சி
பாத்திரம் கழுவும் லிக்விட், பேக்கிங் பவுடர், தண்ணீர் ஆகிய மூன்றையும் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பொருட்களை துடைக்க பயன்படுத்தலாம். ஜன்னல், கதவுகளுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள், கால்மிதிகளை துவைக்கும்போது அதில் சமையல் சோடாவை கொஞ்சம் சேர்த்துக் கொண்டால் அழுக்குகள் நன்றாக நீங்கும்.
வீடுகளில் நமக்கு பெரிய தொல்லையாக இருப்பது கரப்பான் பூச்சி. கரப்பான் பூச்சியின் தொல்லையில் இருந்து தப்பிக்க சமையல் அறைகளில் பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம். குழந்தைகளின் கைகளில் அது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பயன்படுத்தாத பொருட்கள்
இனி பயன்படுத்தவே மாட்டோம் என்ற பொருட்கள் துணிகளையும் வீட்டை விட்டு அப்புறப்படுத்துங்கள். மேலும் உடைந்து போன பொருட்களையும் வீட்டை விட்டு அப்புறப்படுத்துங்கள். இது எதிர்மறை எண்ணத்தை வீட்டிற்கு கொண்டு வரும்.
அதிகம் பயன்படுத்தாத பொருட்களை பிளாஸ்டிக் கவர் கொண்டே அல்லது ஏதேனும் பெரிய பைகளிலோ போட்டு மூடி பரணில் வைத்து விட்டால் அழுக்கு படிவதை தவிர்க்கலாம். அட்டைப்பெட்டியில் போட்டு பேக் செய்தால் அதன் மேல் என்னென்ன பொருட்களை உள்ளே வைத்து இருக்கிறீர்கள் என எழுதி வைத்தால் அந்த பொருட்கள் தேவைப்படும் பொது எடுக்க சுலபமாக இருக்கும்.
நிறம் மங்கியிருக்கும் தலையணை உறையை, தலையணையின் உள் உறையாக பயன்படுத்தலாம். இதனால் தலையணை சீக்கிரம் கறைபடியாது.
வாகனங்களை துடைக்க
வாகனங்களை சுத்தப்படுத்த முதலில் இடம் தேர்வு செய்வது அவசியம். சிமெண்ட் பூசப்பட்ட பரப்பு இதற்கு ஏற்றதாகும். கூடுமானவரை மண் தரையை தவிர்ப்பது நல்லது.
ஈரப்படுத்தி துடைப்பதற்கு, உலரவைத்து துடைப்பதற்கு என்று குறைந்தபட்சம் 4 துணிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.வாகனத்தின் எஞ்சின் மற்றும் சக்கரங்களை துடைப்பதற்கு 2 துணிகளும், இதர பாகங்களை துடைப்பதற்கு 2 துணிகளும் தேவைப்படும்.
வாகனத்தில் எலக்ட்ரிக் பாகங்களின் மீது நேரடியாக தண்ணீர் படுவதை தவிர்க்க வேண்டும். அந்த இடங்களில் ஈரத்துணியால் துடைப்பதே சிறந்தது.

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
