இனி கேஸ் பர்னர் சுத்தம் செய்ய கஷ்டப்பட வேண்டாம்: இதோ எளிய டிப்ஸ்
நம்முடைய வீடுகளில் சமையல் அறையில் எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து விடுவோம். ஆனால், பல நேரங்களில் கேஸ் பர்னரை சுத்தம் செய்ய தவறி விடுவோம்.
அதனால் அதில் அழுக்கு நிறைய படிந்து நம்முடைய கேஸ் விரைவாக காலியாகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.
அதாவது, LPG சிலிண்டரில் புரொப்பேன், பியூட்டேன் வாயுக்கள் இருக்கும். அவை ஆக்ஸிஜன் உடன் கலந்தால் மட்டுமே நீல நிறத்தில் தீ வெளிப்படும்.
ஆனால், பர்னரில் அடைப்பு இருந்தால் வாயுக்கள் கலப்பதில் தடை ஏற்பட்டு நெருப்பு ஆரஞ்சு நிறத்தில் வெளிப்படும். அதோடு சமைக்கும் நேரமும் அதிகமாகிவிடும்.

அந்த வகையில் கேஸ் பர்னரை சுத்தம் செய்து விட்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அப்படியாக கேஸ் பர்னரை சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கேஸ் பர்னர் சுத்தம் செய்ய இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து ஒரு பேஸ்ட் போல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனை அடைப்பு இருக்கும் பகுதியில் தேய்த்து டூத் பிரஷ் பயன்படுத்தி நல்ல ஸ்கிராப் செய்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை தவிர்த்து ஒரு பவுலில் வினிகர் மற்றும் வெதுவெதுப்பான நீரை சம அளவில் எடுத்துக்கொண்டு பர்னரை 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு ஸ்கிரப் செய்து கழிவினாலும் சுத்தம் ஆகிவிடும்.
இன்னும் எளிய வழியாக எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அவை கிரீஸ் மற்றும் அழுக்கை எளிதாக அகற்றி விடும். அதனால் எலுமிச்சையை பாதியாக வெட்டி அதன் மீது உப்பு தடவி பர்னர் மேற்பரப்பில் தேய்க்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுதும் ஒரு நல்ல மாற்றம் நமக்கு கிடைக்கிறது. மேலும், வீடுகளில் சமைக்கும் பொழுது பாத்திரத்தை மூடி சமைப்பதும் மிதமான தீயில் சமைப்பது போன்றவை கேஸ் வீணாக்குவதை மிச்சப்படுத்த உதவுகிறது.
அதோடு மஞ்சள் அளவு ஆரஞ்சு நிறத்தில் தீ வெளிப்படுவதும். நெருப்பு சரியாக வராமல் இருப்பதும் உணவு சமைக்க நீண்ட நேரம் எடுப்பது மேலும் பாத்திரத்தில் கருப்பு புள்ளிகள் போன்றவை கேஸ் பர்னரை சுத்தம் செய்ய வேண்டிய நிலையை நமக்கு எடுத்து காட்டுகிறது. முக்கியமாக கேஸ் பர்னரை நன்றாக சுத்தம் செய்த பிறகு அதை நன்றாக உலர்த்திய பிறகு மீண்டும் சமைக்க வேண்டும்.