மொபைலில் வந்த அலர்ட் சத்தம் - அலறி ஓடிய அமெரிக்க மக்கள்! நடந்தது என்ன?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸின் கடலோர நகரமான மாலிபுவில் காலை 7:28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.1 ரிக்டர் அளவில் பதிவானது.
இந்த நிலநடுக்கம் மாலிபுவில் வடக்கே 4.3 மைல் தொலைவில் மையம் கொண்டு தாக்கியுள்ளது. அது கிட்டத்தட்ட 7 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
முதலில் 5.1 ரிக்டர் அளவிலிருந்ததாக பதிவு செய்யப்பட்ட நிலையில் 4.6 ஆகக் குறைக்கப்பட்டு பின்னர் 4.7 ஆகத் திருத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தூக்கத்திலிருந்த மக்கள் ஏராளமானோர் விழித்துள்ளனர்.
நிலநடுக்கம்
நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை நிலநடுக்க அவசரக்காலம் அறிவிப்பை மக்களின் மொபைல் போன்கள் வாயிலாக அனுப்பியது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குள் உள்கட்டமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை மற்றும் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.