முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்ற நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அது 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை இதுவரை விடப்படவில்லை என்றும், அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
முதல்வர்
இந்நிலையில், வெளிநாட்டு பயணத்திற்கு ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த சமயத்தில் நிலநடுக்கமும் சக்திவாய்ந்த நிலையில் ஏற்பட்டது, மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழக முதல்வருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.