துருக்கியை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
துருக்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன் 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து பொதுமக்கள் இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதன்படி, 20,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால், ஜெயப்பிரவில் கடற்கரை ஒட்டி இருந்த உணவகம் ஒன்று இடிந்து கடலுக்குள் விழுந்துள்ளது. இதில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 10.10 மணிக்கு ஃபாசியாபத் பகுதியில் இருந்து 265கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.