துருக்கி நிலநடுக்கம் - மாயமான கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு உயிருடன் மீட்பு...! - மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

Football Turkey Earthquake
By Nandhini Feb 07, 2023 01:03 PM GMT
Report

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கானாவின் சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு இடிபாடுகளுக்குள் புதையுண்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.

துருக்கி நிலநடுக்கம்

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் நேற்று முதல் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பிரபல கால்பந்து வீரர் மாயம்

இந்த நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இவருக்காக உலக மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். 

turkey-earthquake-famous-footballer-christian-atsu

வீரர் கிறிஸ்டியன் அட்சு உயிருடன் மீட்பு

இந்நிலையில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கானாவின் சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு இடிபாடுகளுக்குள் புதையுண்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட வீரர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 31 வயதான அவர், பிரீமியர் லீக்கில் தனது காலத்தில் செல்சி மற்றும் நியூகேஸில் ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

கடந்த திங்களன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் அவர் இடிபாடுகளில் சிக்கினார்.

அட்சு, செல்சியாவிலிருந்து கடனில் நியூகேஸில் யுனைடெட் மற்றும் எவர்டனுக்காக இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடி, செப்டம்பரில் ஹேட்டாய்ஸ்போரில் சேர்ந்தார். அவர் கடைசியாக 2019 இல் கானாவுக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அதிகாரப்பூர்வமாக சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறவில்லை.