டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை உலுக்கிய நிலநடுக்கம் - அலறிய மக்கள்
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வு
இந்தியாவிலும் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில் 3 வினாடிகள் வரை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதனால் அவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.
இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் வசுந்தரா, காசியாபாத் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களும் வீடுகளை விட்டு வெளியேறினர்.
மக்கள் பீதி
இதுதவிர பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சில இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
தற்போது நில அதிர்வை உணர்ந்த மக்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.