ஒற்றுமை யாத்திரையில் பாலியல் வன்கொடுமை : வீட்டிற்கு விரைந்த டெல்லி போலீசார்

Indian National Congress Rahul Gandhi Crime
By Irumporai 3 நாட்கள் முன்

காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரையில் ராகுல் கூறிய பாலியல் வன்கொடுமை கருத்துக்கு விளக்கமளிக்க அவரின் வீட்டிற்கு டெல்லி போலீசார் சென்றுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

ராகுல் காந்தி தலைமையில் நடந்த ஒற்றுமை யாத்திரையின் ஸ்ரீநகர் உரையின் போது, ராகுலின் பாலியல் வன்கொடுமை கருத்து குறித்த நோட்டீசுக்கு பதில் அளிக்கக் கோரி டெல்லி காவல்துறை குழு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்திற்கு சென்றுள்ளது. ஒற்றுமை யாத்திரையில் ஸ்ரீநகர் உரையின் போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என கூறியிருந்தார்.  

ஒற்றுமை யாத்திரையில் பாலியல் வன்கொடுமை : வீட்டிற்கு விரைந்த டெல்லி போலீசார் | Ahuls Sexual Assault Comment On Unity Yatra

காங்கிரஸ் விளக்கம்

இதற்கு ராகுலுக்கு காவல்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறை, ராகுல் காந்தியின் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். ராகுல் காந்தியிடம், பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்த பெண்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு போலீசார் அவரிடம் கேட்டனர். இதற்குப் பதிலளித்த காங்கிரஸ், “நோட்டீசுக்கு சட்டப்படி உரிய நேரத்தில் பதிலளிப்போம்” என்று கூறியது. 

குறித்து ட்விட்டரில் பதிலளித்த காங்கிரஸ், பிரதமர் மோடி மற்றும் அதானியின் உறவு குறித்த ஸ்ரீ ராகுல் காந்தியின் கேள்விகளால் பதற்றமடைந்த அரசாங்கம், அதன் காவல்துறைக்கு பின்னால் ஒளிந்து கொண்டது. யாத்திரை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு, டெல்லி காவல்துறை நோட்டீஸ் மூலம், பெண்களின் விவரங்களைக் கேட்டுள்ளது.

நோட்டீசுக்கு சட்டப்படி உரிய நேரத்தில் பதிலளிப்போம். இந்த நோட்டீசுக்கு பதில் அளிப்பதாக காங்கிரஸ் உறுதியளித்தும், அதற்கு தீர்வு காணாததால் டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.