பூமியை இரண்டாய் பிளக்கும் விரிசல்! ஆராய்ச்சி கூறும் பகீர் உண்மை - எங்கு உள்ளது தெரியுமா?
ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் கண்டத்தை இரண்டாய் பிரிக்கும் விரிசலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பிளக்கும் விரிசல்
பூமியின் அடியில் அமைந்திருக்கும் டெக்டோனிக் தட்டுகளின் அடிப்படையில் தான் பூமி உருவனாதாக கூறப்படுகிறது. தற்போது இந்த டெக்டோனிக் தட்டுகளால் ஒரு புதிய கடல் உருவாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில், கண்டங்களை இரண்டாக பிளவுபடுத்திய விரிசலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் ஆப்ரிக்காவில் புதிய கடல் உருவாகலாம் என்று தெரிவிக்கின்றனர்.
அப்படி உருவானால் இதுவே 6 வது கடலாகும். கடந்த 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடத்தை அப்ரிக்காவின் பிளவு அமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆனால் தி எர்த் அறிக்கயின் படி, சுமார் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கூறப்படுகிறது.
பூமியில் தற்போது பசுபிக், அண்டார்டிங், ஆர்க்டிக், இந்தியன் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் உள்ளன.
பகீர் உண்மை
இந்நிலையில், புதிய பெருங்கடல் உருவானால் அது புவியியலில் கடும் மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த சில வருடங்களாக டெக்டோனிக் தட்டுகள் விலகி செல்வது அதிகரித்துள்ளது.
அதனால் தான் கிழக்கு ஆப்ரிக்க பிளவு இரண்டு டெக்டோனிக் தகடுகளின் விளைவு என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். கிழக்கில் சோமாலி தட்டு மற்றும் மேற்கில் நுபியன் தட்டு காரணமாக இந்த இரு தட்டுகளும் பிரிந்து செல்வதால் விரிசல் ஆழமாகிறது.
மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவும் ஆப்ரிக்காவும் தனி கண்டங்களாக ஆனபோது இப்படி நிகழ்ந்ததாக சொல்லபடுகிறது. எத்தியோப்பியா, உகாண்டா போன்ற நிலத்தால் சூழப்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் கடற்கரை உருவாக வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த விரிசல் ஆண்டுக்கு 0.7 மிமீ விரிவதாக அறிக்கை கூறுகிறது.
இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் பேராசிரியர் மசிபிள் கூறுகையில், “ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் ஆகியவை அஃபார் பகுதியையும் கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கையும் வெள்ளத்தில் மூழ்கடித்து ஒரு புதிய பெருங்கடலாக உருவாகும். மேலும் கிழக்கு ஆப்பிரிக்காவின் அந்த பகுதி அதன் சொந்த சிறிய கண்டமாக மாறும் என்றார்.