ஒரு உயிரினம் கூட மிச்சமிருக்காது; பூமியே மொத்தமா அழிஞ்சிரும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

World
By Sumathi May 03, 2024 08:21 AM GMT
Report

பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமிருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 பூமியின் வெப்பநிலை

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.

ஒரு உயிரினம் கூட மிச்சமிருக்காது; பூமியே மொத்தமா அழிஞ்சிரும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! | Earth Will Be Destroyed Due To Carbon Dioxide

அதில், 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும்.

எந்த உயிரினமும் வாழ இயலாது. அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும். பூமியில் நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம்.

பருவநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலை.. பதறும் உலக நாடுகள்..

பருவநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலை.. பதறும் உலக நாடுகள்..

பேரழிவு 

அதனால், டைனோசர்கள் அழிந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வு குறித்து அதன் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், உலகில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம்.

ஒரு உயிரினம் கூட மிச்சமிருக்காது; பூமியே மொத்தமா அழிஞ்சிரும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! | Earth Will Be Destroyed Due To Carbon Dioxide

இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் உருவாகும். பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும். வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி,

பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிப்பதாக தெரிவித்துள்ளார்.