புயல் எப்படி உருவாகிறதுன்னு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்...

Mandous Cyclone
By Nandhini Dec 09, 2022 12:34 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

புயல் எப்படி உருவாகிறது என்பதை பற்றி பார்ப்போம் -

புயல் எப்படி உருவாகிறது?

புயல் உருவாகுவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்பு. பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒரு பக்கமாக சாய்ந்து சுழலும்போது, சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மீதும் சீராகப்படாது.

இதனால், பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும், மற்றொரு பகுதி வெப்பம் குறைவாகவும் இருக்கும். அப்போது, கடற்பரப்பில் 26'C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் பொழுது காற்று வெப்பமடையும்.

இந்த வெப்பமடைந்த காற்று மேல்நோக்கி செல்லும். மேல்நோக்கி காற்று செல்லும்போது, அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடமாக உருவாகும். காற்றின் அழுத்தம் அதிகமாக, அதிகமாக வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கும்.

இதனால், மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடையும். இந்த குளிர்ந்த வெப்பகாற்று தாழ்வு நிலையில் தங்கும். இதன் காரணமாக தாழ்வுநிலை ஏற்படும். இந்த தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கும். இதுவே காற்றழுத்த தாழ்வு நிலை என்று சொல்லப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்று சொல்லப்படும். அதுவே இந்த காற்று பம்பரம் போல் வேகமாக சுழன்றால், அது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி என்று சொல்லப்படுகிறது.

இந்த காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்க, அதிகரிக்க, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்.

இந்த வலுப்பெற்ற காற்று மணிக்கு, 63 கி.மீ வேகத்திற்கு மேல் எட்டும் போது அது புயல் என்று கணிக்கப்படுகின்றது. இப்படித்தான் ஒரு புயல் உருவாகிறது. 

cyclone-how-do-storms-form