மக்கள் தொகை வீழ்ச்சி மிகப்பெரிய அச்சுறுத்தல் : எலான் மஸ்க் பரபரப்பு கருத்து

Elon Musk
By Irumporai Jun 06, 2022 06:11 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ட்விட்டரில் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்த நபர் யார் என்றால் உடனே இணையவாசிகள் கூறி விடுவார்கள் அது எலான் மஸ்க் எனக் கூறிவிடுவார்கள்.

இந்த நிலையில் எலான் மஸ்க் உலக நாடுகளில் சிலவற்றில் மக்கள் தொகை குறைந்து வருவது நாகரிகத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.

ஜப்பான் நாடே இல்லாமல் போகலாம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் ஜப்பான நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருகிறது, விரைவில் அந்த நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்காவிட்டால் , விரைவில் ஜப்பான் என்றே நாடே இல்லாமல் போகலாம் என எலான் மஸ்க் கூறிய நிலையில், தற்போது மீண்டும் மக்கள் தொகை வீழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.

மக்கள் தொகை வீழ்ச்சி மிகப்பெரிய அச்சுறுத்தல் :  எலான் மஸ்க் பரபரப்பு கருத்து | Earth Could Have Many Times Population Elon Musk

மக்கள் தொகை வீழ்ச்சி பெரும் அச்சுறுத்தல்

உலக நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து கூறுகையில்: மக்கள்தொகை வீழ்ச்சி, "நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்". சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளையும் என்பதால் மக்கள் குழந்தைகளைப் பெறுவதில்லை என்ற கதை முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை வீழ்ச்சி மிகப்பெரிய அச்சுறுத்தல் :  எலான் மஸ்க் பரபரப்பு கருத்து | Earth Could Have Many Times Population Elon Musk

மேலும் அவர் 'பூமி அதன் தற்போதைய மனித மக்கள்தொகையை விட பல மடங்கு தாங்கும் சக்தி உடையது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் அமைப்பும் நன்றாகத்தான் இருக்கும்' என தெரிவித்துள்ளார்.  

எங்க நாட்டில் உள்ள 2 லட்சம் குழந்தைகளை ரஷ்யா கடத்திவிட்டது : உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி