வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்தே சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா?

Gold
By Yashini Feb 01, 2026 07:11 AM GMT
Report

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பல குடும்பங்களில் தங்க நகைகள் செல்வத்தின் அடையாளமாக கருதப்பட்டு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுகின்றன.

ஆனால், நீண்ட காலமாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தங்கத்தை வைத்து கூடுதல் வருமானம் பெற முடியும் என்ற தகவல் பலருக்கும் தெரியாது. 

அதாவது, வீட்டில் இருக்கும் தங்கத்தை நகைக்கடைக்காரர்கள், சுத்திகரிப்பு நிறுவனங்கள் அல்லது நிதி தளங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடலாம்.

வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்தே சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? | Earn Money From Gold Jewellery Kept At Your Home

இதன் மூலம் ஆண்டு வருமானமாக 1 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி பெற வாய்ப்புள்ளது.

இந்த வருமானம் ரொக்கம், தங்கம் அல்லது வட்டி வடிவில் வழங்கப்படுகிறது. 

தங்கத்தின் விலை உயர்ந்தால் வருமானத்தின் மதிப்பு தானாகவே அதிகரிக்கும். இருப்பினும், தங்கத்தின் விலை குறைந்தால் வருமானத்தின் மதிப்பும் குறையும்.

அதேபோல், RSBL போன்ற சில டிஜிட்டல் தளங்கள் தங்க குத்தகை சேவையை வழங்குகின்றன. இது வங்கிக் கடன்களை விட விரைவான மற்றும் மலிவானதாக கருதப்படுகிறது.

வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்தே சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? | Earn Money From Gold Jewellery Kept At Your Home

மேலும் மத்திய அரசு 2015ல் தொடங்கிய தங்க பணமாக்குதல் திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்படாத தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தால் 2.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. 

தங்கத்தை விற்காமல் பாதுகாப்பாக வைத்துக்கொண்டே வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இதற்கான முக்கிய விதிமுறைகள் தங்கம் 995 தூய்மையுடன் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 10 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்யலாம் மற்றும் வைப்பு காலத்தில் பணத்தை திரும்ப பெற முடியாது.