அதிகரிக்கும் கிட்னி செயலிழப்பு; ஆரம்பத்திலேயே தெரிஞ்சுக்கனுமா? இதை கவனீங்க!

Kidney Disease
By Sumathi Mar 14, 2024 05:28 AM GMT
Report

கிட்னி செயலிழப்பு குறித்த அறிகுறிகளை காணலாம்.

சிறுநீரக பாதிப்பு சிறிய அளவில் இருக்கும் போதே கண்டறிவது மற்றும் சரியாக நிர்வகிப்பது குணமடைவதை எளிதாக்க கூடும். எனவே, பாதிப்பு ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நாம் புரிந்து கொள்வது முக்கியம்.

kidney

மக்களே உஷார்! இருமல் மருந்தால் சிறுநீரகம் பாதிப்பு - 133 குழந்தைகள் உயிரிழப்பு

மக்களே உஷார்! இருமல் மருந்தால் சிறுநீரகம் பாதிப்பு - 133 குழந்தைகள் உயிரிழப்பு

கிட்னி செயலிழப்பு  அறிகுறிகள்

  • சிறுநீரகங்களில் நேரடி பாதிப்பு - தொற்றுகள், சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.
  • சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு - கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது AKI பாதிப்புக்கு வழிவகுக்கும்.
  • சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைதல் - டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக இது நிகழலாம்.
  • சிறுநீரகம் தொடர்பான நோய்கள் - Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம். மேலும், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவது, திரவம் தேங்குவதால் கால்கள், கணுக்கால் அல்லது முகத்தில் வீக்கம் ஏற்படுவது, சோர்வு மற்றும் பலவீனம், குமட்டல், வாந்தி, அல்லது பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.