கொளுத்தும் வெயில்; கொடைக்கானல் போறீங்களா? இ-பாஸ் குறித்த முழுவிவரம் இதோ..

Tamil nadu Summer Season Tourism Dindigul
By Sumathi May 06, 2024 04:06 AM GMT
Report

சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெயில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

kodaikanal

இந்நிலையில், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் - வைரல் புகைப்படங்கள் உள்ளே

கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் - வைரல் புகைப்படங்கள் உள்ளே


இ-பாஸ்

அதனைத் தொடர்ந்து, "epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

e-pass

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் மொபைல் செயலி மூலம் இந்த கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விவரங்களை தெரிந்துவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.