கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் - வைரல் புகைப்படங்கள் உள்ளே
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று கண்டு ரசிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஓய்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.
அதனைத் தொடர்ந்து பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த இரண்டு தினங்களாக தங்கும் விடுதியை விட்டு வெளியில் வராமல், விடுதியிலேயே நடைபயிற்ச்சி மேற்கொண்டதுடன் மற்றும் கேரம் விளையாடினர்.
இந்நிலையில் இன்று கொடைக்கானல் மேல்மலை கிராமங்கலான மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட கிராமங்களில் தனது குடும்பத்தினருடன் சென்று மன்னவனூரில் உள்ள ஆட்டுப்பண்ணை, முயல் பண்ணை, சூழல் சுற்றுலா மற்றும் கூக்கால் ஏரியை கண்டு ரசித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்த சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சென்றனர்.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்கு மூன்று வார காலம் இடைவெளி உள்ள நிலையில் ஓய்விற்காக ஸ்டாலின் கொடைக்கானல் சென்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.