ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா?அப்போ இது அவசியம்..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உதகை , கொடைக்கானலுக்கு சேஃவோருக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது முக்கியம்..
தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களான உதகை , கொடைக்கானலுக்கு கோடைகாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். விடுமுறைகளில் குடும்பத்துடன் சென்று வர இந்த இடங்கள் மிகவும் பிரபலம்.
இதன் காரணமாக வாகன நெரிசல் , விடுதி அறைகள் பற்றாக்குறை, உணவு பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் இ-பாஸ் முறையை உயர்நீதிமன்ற மதுரைகிளை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதிரடி உத்தரவு
முன்னதாக மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை உதகை மற்றும் கொடைக்கானல் செல்வோர் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக, இ-பாஸ் பெறும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தொலைபேசி எண்களை அடிப்படையாக வைத்து விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வரும் 30 ஆம் தேதியுடன் இந்த நடைமுறை நிறைவடைய இருந்த நிலையில்,
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் பெறும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.