பொண்ணு கொடுக்க காரணமே அதுதான்; அது ரொம்ப வருத்தம் - துர்கா ஸ்டாலின் சகோதரர் பேட்டி!

M K Stalin
By Sumathi Sep 22, 2023 09:28 AM GMT
Report

துர்கா ஸ்டாலின் சகோதரர் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஜெய. ராஜ மூர்த்தி

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டானின். அவருடைய தம்பியும் மருத்துவருமான ஜெய. ராஜ மூர்த்தி கவிஞர், எழுத்தாளர், மருத்துவர் என பன்முக தன்மை கொண்டவர். தற்போது ஈஎஸ்ஐ இயக்குநராக உள்ளார்.

பொண்ணு கொடுக்க காரணமே அதுதான்; அது ரொம்ப வருத்தம் - துர்கா ஸ்டாலின் சகோதரர் பேட்டி! | Durga Stalins Brother Opens Up Mk Stalin

பெரியாரும், வள்ளலாரும் என புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பெரியாரின் தாக்கம் கலைஞருக்கு இருந்தது. பின்னர் பெரியாரின் மீது ஈடுபாடு, அண்ணாவின் மீது ஈடுபாடு இருந்தது.

பகுத்தறிவு வாதிகள்

அவர்கள் எல்லாம் பகுத்தறிவு வாதிகள். என்னை பொறுத்தவரை நாத்திகவாதிகள் ஆத்திக வாதிகள் என பார்ப்பதை விட பகுத்தறிவாதிகள் சிந்தனையாளர்கள் எனலாம். அவர்கள் குடும்பத்தில் ஏன் இப்படி கோயிலுக்கு போகிறாய் என அக்காவை கேட்பது இல்லை.

பொண்ணு கொடுக்க காரணமே அதுதான்; அது ரொம்ப வருத்தம் - துர்கா ஸ்டாலின் சகோதரர் பேட்டி! | Durga Stalins Brother Opens Up Mk Stalin

நான் 6ம் வகுப்பு படித்த போது அக்காவிற்கு திருமணம் நடந்து விட்டது. எங்கள் அப்பா முதல்வர் வீட்டு வரன் வந்தபோது ஜாதகம் பார்த்தார். அப்போது ஜோசியர் தாராளமாக திருமணம் செய்யலாம். இந்த ஜாதகத்தின் யோகத்திற்கு தமிழகத்தை ஆளும் தகுதி, நாட்டை ஆளும் அரசனுக்கு இருக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் உள்ளது என தெரிவித்தார்.

மண் சட்டி தான்.. அவருக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் - துர்கா ஸ்டாலின் சமையலறை!

மண் சட்டி தான்.. அவருக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் - துர்கா ஸ்டாலின் சமையலறை!

ஆனால் அதை இருந்து பார்க்க எங்கள் அப்பா இல்லை. எதைப்பற்றியும் கவலை இல்லாமல் தொடர்ச்சியாக விடாமுயற்சியுடன் உழைத்தார். அதோடு அக்காவின் பக்தியும் சேர்ந்து இன்று முதல்வராக உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.