மண் சட்டி தான்.. அவருக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் - துர்கா ஸ்டாலின் சமையலறை!

M K Stalin Tamil nadu
By Sumathi Mar 13, 2023 12:40 PM GMT
Report

துர்கா ஸ்டாலின் கோலோச்சும் சமையலறையின் டூர் குறித்த தகவல்கள் சில இதோ...

துர்கா ஸ்டாலின் 

முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமையலறை பற்றிய டூர் வீடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவரது சமையலறையில் பல பழைய பாத்திரங்கள் இருக்கின்றன.

மண் சட்டி தான்.. அவருக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் - துர்கா ஸ்டாலின் சமையலறை! | Durga Stalin Kitchen Tour

குறிப்பாக அம்மி, உரல் போன்ற சில பழைய உபகாரங்களும் இருக்கின்றன. அதேபோல மண் பானை போன்றவையும் வைத்திருக்கிறார். திருமணம் முடிந்துதான் சமைக்க கற்றுக்கொண்டேன். கொரோனா காலகட்டத்திற்கு வீட்டில் மூலிகை பொடி வைத்திருக்கிறேன்.

சமையலறை

காய்ச்சல் சளி வந்தால் கசாயம் வைத்து குடிப்போம். விறகு அடுப்பில் கூட சமையல் செய்திருக்கிறேன். மருமகள் கையால் சமைத்த பிரியாணியை விரும்பி சாப்பிடும் முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா செய்யும் மீன் குழம்பை விரும்பி சாப்பிடுவாராம்.

அவரின் மாமனார் கலைஞருக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்குமாம். நாட்டுக்கோழி உள்ளிட்ட அசைவ உணவு அதிகம் விரும்பி சாப்பிடுவார். சமைக்க ஆள் இருந்தாலும் காரம் குறைவாக போட்டு தனியாக சமைத்து கொடுப்போம் என்று கூறியுள்ளார்.