துர்கா ஸ்டாலினுக்கு பெருமாள் குடை - சர்ச்சையான பகீர் வீடியோ!

Chennai Viral Video
By Sumathi Dec 13, 2022 04:04 AM GMT
Report

துர்கா ஸ்டாலினுக்கு, பெருமாளுக்கு பிடிக்க வேண்டிய குடையை பிடித்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

சாமி தரிசனம்

திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது மழை பெய்து கொண்டிருந்ததால்

துர்கா ஸ்டாலினுக்கு பெருமாள் குடை - சர்ச்சையான பகீர் வீடியோ! | Perumal Umbrella For Durga Stalin Video Viral

அவருடன் வந்தவர்கள் துர்கா ஸ்டாலினுக்கு கொடை பிடித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். இந்நிலையில், முன்னே பெருமாளை தூக்கிச் செல்ல, பின் வந்த துர்கா ஸ்டாலினுக்கு பெருமாளுக்கு பிடிக்க வேண்டிய குடையை பிடித்துள்ளார்கள்.

சர்ச்சை வீடியோ 

துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்க வேண்டிய கருப்புக்குடையை பெருமாளுக்கு பிடித்து சென்று இருக்கிறார்கள். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலான நிலையில், சர்ச்சையை கிளப்பியுள்ளது.