யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

Tamil nadu
By Irumporai Jun 07, 2022 06:59 AM GMT
Report

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

முதல்வரை விமர்சித்த சாட்டை

நாம் தமிழர் கட்சி அனுதாபியான சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட  ஜாமீன் ரத்து | Duraimurugans Bail Revoked By Youtube Whip

இந்நிலையில் சாட்டை துரைமுருகன்நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது

. இந்த நிலையில் இன்று இந்த வழக்கினை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற சாட்டை துரை முருகனுக்கு வழங்கப்பட ஜாமினை ரத்து செய்தது . இது குறித்து உயர்நீதிமன்ற கிளை அளித்துள்ள தகவலின் படி :

ஒப்பந்த விதிகளை மீறினால் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்படின் சேனலை முடக்கவும் செய்யலாம் என்றும் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் வீடியோக்களை நீக்காத பட்சத்தில் அவர்களும் குற்றவாளிகளே என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட  ஜாமீன் ரத்து | Duraimurugans Bail Revoked By Youtube Whip

சட்டம் போட்ட  உயர்நீதிமன்ற கிளை

மேலும், அவதூறு கருத்துக்களை பதிவிட்டால் அதனை சமூக வலைத்தளங்களே நீக்க வேண்டும் அல்லது அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறிய நீதிமன்றம். நடவடிக்கை எடுக்க தவறும் சமூக வலைத்தளங்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், வீடியோவை நீக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பொதுவாகவே யூடியூப் தளம் தற்போது பொதுமக்களிடையே பெரும் வரவேறபை பெற்ற நிலையில் சில கட்டாய விதி முறைகளை கொண்டு வந்துள்ளது. அதனையும் மீறி சில வீடியோக்கள் வரும் நிலையில் அது அரசிற்கு எதிராக பார்க்கப்படும்.

ஏற்கனவே யூடியூப்பர் துரைமுருகன் ஜாமீன் கேட்டபோது இனி அவதூறு கருத்து பதிவிடமாட்டேன் என பிராமணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார் சாட்டை துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது  

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு