எந்த அணையையும் தூர்வார முடியாது - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
மேட்டூர் அணை உள்ளிட்ட எந்த அணையையும் தூர்வார முடியாது என துரைமுருகன் பேசியுள்ளார்.
துரைமுருகன்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு துணை கண்காணிப்பு அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "காவிரியின் குறுக்கே ஆதனூர், குமாரபாளையம், புங்கனூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணிகள் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆதாரம் இல்லாமல் பேசியிருக்கிறார்.
மேட்டூர் அணை
அதிமுக ஆட்சியில்தான் அந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், சரியாக ஆய்வு நடத்தாமல் தொடங்கப்பட்ட திட்டம் அது. இடத்தை தேர்வு செய்ததில்கூட தவறு செய்துள்ளனர். இதைப்பற்றி சட்டமன்றத்தில் அவர் பேசினால், உரிய பதில் அளிப்பேன்.
அணைக்கட்டுகளை எங்கும் தூர்வார முடியாது. எந்த நாட்டில் அணைகளை தூர்வாரி இருக்கிறார்கள்? மேட்டூர் அணையோ அல்லது வேறு எந்த அணையோ இருந்தாலும் அணைக்கு கீழே மணல் வருவதற்கு சரியான இடம் உண்டு. அதில் மணல் அடித்து வரும் அது ஆற்றில் சேரும், ஆற்று மணல் தான் எடுத்து வருகிறோம். அணையை எங்கும் தூர்வார மாட்டார்கள்" என பேசினார்.