நீர்வள அமைச்சருடன் சந்திப்பு; அவர் பேசியது எதுவும் புரியவில்லை - துரை முருகன்

Delhi Durai Murugan Karnataka
By Karthikraja Jul 25, 2024 01:34 PM GMT
Report

அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் பி.ஆர்.பாட்டிலை சந்தித்து பேசினார்.

காவேரி நதி நீர்

காவேரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. 

duraimurugan

இந்நிலையில் இது குறித்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டிலை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.  

மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

துரை முருகன்

அப்போது அவரிடம் அமைச்சர் துரை முருகன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கர்நாடகாவில் தற்போது மழை பெய்து வருவதால் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை நிலுவை பாக்கி இல்லாமல் கர்நாடக அரசு தந்துள்ளது. இந்த மாதம் இறுதிவரை தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 45 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும். 

duraimurugan latest press meet

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தடையாக இருப்பதால் மத்திய அரசு அதில் தலையிட வேண்டும். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரை முருகன், புதிய அமைச்சரவை பதவியேற்றபின், துறை சார்ந்த மந்திரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். காவிரியில் தடையின்றி தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒருபோதும் கர்நாடகா காவிரி நீரைத் திறந்ததே கிடையாது. மேகதாது, காவிரி பிரச்சனை குறித்து ஜல்சக்தித் துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம்அவர் இந்தியில் பதிலளித்ததால் அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை.' என பேசியுள்ளார்.