மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

Tamil nadu Karnataka
By Karthikraja Jul 16, 2024 08:59 AM GMT
Report

 மேகதாது அணை கட்டுமானம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

காவேரி நதி நீர்

காவேரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. 

dk shivakumar

ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அணைத்து கட்சிகள் கூட்டத்துக்கு பின் தமிழகத்துக்கு நீரை திறந்து விட விட முடியாது எனவும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 

தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவோம் - அனைத்து கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி!!

தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவோம் - அனைத்து கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி!!

டி.கே.சிவகுமார்

இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்துறை வல்லுநர்கள் உட்பட அணைத்து கட்சிகளின் சார்பிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

mk stalin

தற்பொழுது இது குறித்து கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தந்து எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இதில் “தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டிடம் என்னுடைய ஒரே வேண்டுகோள், மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது தான். 

இந்த அணையால் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டும் சரிசமமாக பலனடையும். இரண்டு மாநிலங்களின் செழிப்புக்கும் இந்த நடவடிக்கை அவசியம்.எனவே, அனைத்தையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு, மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு பச்சைக் கொடி காட்டி, பிராந்தியத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.