நான் இன்னும் பதவியில் இருக்க காரணம் இதுதான் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

Tamil nadu DMK Durai Murugan Vellore
By Swetha Sep 14, 2024 02:30 AM GMT
Report

கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடியில் பொது குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நான் இன்னும் பதவியில் இருக்க காரணம் இதுதான் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்! | Duraimurugan Explains The Reason For His Position

அப்போது பேசிய அவர், பவள விழாவை முன்னிட்டு ஒவ்வொரு திமுகவினரின் வீட்டிலும் கொடி ஏற்ற வேண்டும். இது நம்முடைய கட்சியினுடைய தலைமை கட்டுப்பாடு. செப்டம்பர் 15,16,17, ஆகிய மூன்று தினங்கள் திமுகவினுடைய கருப்பு சிவப்பு துண்டு கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

மூத்த தலைவர்கள்..இளைஞர்களுக்கு வழி விடுங்க- மீண்டும் சர்ச்சையான துரைமுருகன் பேச்சு!

மூத்த தலைவர்கள்..இளைஞர்களுக்கு வழி விடுங்க- மீண்டும் சர்ச்சையான துரைமுருகன் பேச்சு!

பதவி

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி வரை இருக்க வேண்டும் ஒரு வாக்கு என்பது மிக முக்கியம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.

நான் இன்னும் பதவியில் இருக்க காரணம் இதுதான் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்! | Duraimurugan Explains The Reason For His Position

பழைய முறைப்படி சரியாக செயல்படாத வாக்குச்சாவடி முகவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை சேர்க்க வேண்டும். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

நான் இந்த பதவியில் இருக்க காரணம், கட்சியில் ஆடாமல் அசையாமல் இருந்ததால்தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோ தேர்வான உடனேயே தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார் என்று தெரிவித்துள்ளார்.