குலம், கோத்திரத்துடன் வைகோ பேத்தி திருமண அழைப்பிதழ்; வெடிக்கும் சர்ச்சை - துரை வைகோ விளக்கம்!
சர்ச்சையான திருமண அழைப்பிதழ் குறித்து துரை வைகோ விளக்கமளித்துள்ளார்.
அழைப்பிதழ் சர்ச்சை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தி, முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகள் வானதி ரேனு. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணனுக்கும் சென்னை திருவேற்காட்டில் திருமணம் நடந்தது.
இதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கனிமொழி எம்பி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
துரை வைகோ விளக்கம்
இதற்கிடையில், இந்த திருமணத்திற்காக நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குவதற்கான அழைப்பிதழில் வைகோவின் ஜாதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திராவிட இயக்கத்தைப் பின்பற்றி வரும் வைகோ வீட்டு திருமண அழைப்பிதழில் குலம், கோத்திரம், நல்ல நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது பேசுபொருளானது. இந்நிலையில், துரை வைகோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தன் மகள் மற்றும் மணமகன் வீட்டாரின் விருப்பத்துக்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடைபெற்றது.
தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே தமிழ் மந்திரங்கள் வாசிக்கப்பட்டது. திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.