என்னை கொல்ல முயன்றால் கூட மன்னிப்பேன். ஆனால்... - துரைமுருகன் ஆவேசம்
போன தேர்தலில் ஏமாந்தது போல் இந்த முறை ஏமாற மாட்டேன் என துரைமுருகன் பேசியுள்ளார்.
துரைமுருகன்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், தேர்தல் எப்படி நடக்கும், நம்ம கட்சியில் எப்படி வியூகம் வகுப்பார்கள், எதிர்க்கட்சியில் எப்படி வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.
சாக கிடக்கும் நடிகர்கள் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லையா? ரஜினி பேச்சுக்கு துரை முருகன் பதிலடி
கட்சிக்கு துரோகம்
கடந்த தேர்தலின் போது கொஞ்சம் ஏமாந்து விட்டேன். இந்த முறை அப்படி நடக்க விடமாட்டேன். அது கொரோனா காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வெளியில் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.
சில துரோகங்கள் செய்துவிட்டார்கள், அதுவும் எனக்கு தெரியும். அந்த துரோகிகளை களை எடுத்துவிட்டு தேர்தலை நடத்தும் ஆற்றல் இந்த துரைமுருகனுக்கு உண்டு. என்னை கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்வோரை நான் மன்னிக்கவே மாட்டேன்.
60- 70 ஆண்டுகள் கட்சியை வளர்த்தவன் நான். ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருப்பவன் நான். போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். விளைவு சில பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அந்த பாடத்தை திரும்பி பார்க்க மாட்டேன்" என பேசினார்.