வேலூர் மருத்துவமனையில் துரை தயாநிதி - நேரில் விரைந்த முதல்வர் ஸ்டாலின்!
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் துரை தயாநிதியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
துரை தயாநிதி
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.
2014ஆம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்துவந்த இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்டாலின் விசிட்
அப்போது, அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அதன்பின், மார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வந்து அண்ணன் அழகிரிக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், சென்னையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்ததையடுத்து வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேலூர் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், சிஎம்சி மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு கிசிச்சை பெற்று வரும் தயாநிதி அழகிரியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும் விசாரித்தார்.