வெளுக்கும் கனமழை..35 பேர் பலி - வெள்ளத்தால் சின்னாப்பின்னமான சாலைகள்!
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை..
4 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக கடுமையாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களைத் தொடர்ந்து மீட்பு பணியினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை வெள்ளத்தால் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17000 மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் உயிர்பலி அதிகரிக்ககூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பயங்கரமாக அடித்துச்செல்லப்பட்ட வெள்ளத்தில் சாலைகள் முழுவதும் அடியோடு பேந்து காட்சியளிக்கிறது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
35 பேர் பலி
குஜராத்தின் வதோதராவில் உள்ள சுதந்திர தேவி சிலைக்கு செல்லும் சாலை, கனமழையால் பாதிக்கப்பட்டு துண்டு துண்டாக காட்சியளிக்கிறது. தொடர் மழையால் ஒருபுறம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இடைவிடாத மழையால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக சாலை சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சாலையின் சீரமைப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், சேதமடைந்த பகுதி இடிக்கப்பட்டு புனரமைப்புக்கு தயார்படுத்தப்படுவதால்,
சீரமைக்க பல மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
The road leading to the Statue of Unity from Vadodara is into pieces. pic.twitter.com/06DvOJPks2
— Our Vadodara (@ourvadodara) August 28, 2024