இந்த வைட்டமின் குறைப்பாடு இருக்கா? அப்போ விந்தணு எண்ணிக்கை குறையும் -ஆண்களே உஷார்!
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விந்தணு எண்ணிக்கை
விந்தணு எண்ணிக்கை என்பது கருவுறுதலை மட்டும் குறிப்பிடுவதில்லை. ஆண்களின் ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. ஆண்களின் உடல்நலத்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை மிக முக்கியம்.
தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடல் உழைப்பில்லாத வேலை,போதிய உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாக இருப்பது வைட்டமின் B12 குறைபாடு என்பது தெரியவந்துள்ளது.
வைட்டமின்
மேலும் 35 முதல் 40 வயதிற்குப் பிறகு விந்தணுக்களின் தரம் கணிசமாக மோசமடையத் தொடங்குவது தெரிய வந்தது.இந்த வைட்டமின் இறைச்சி, முட்டை, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் போன்ற விலங்கு அடிப்படையிலான உணவுகளில் வைட்டமின் B12 காணப்படுகிறது.
வைட்டமின் B12 என்பது ஆண்களில் ஆற்றலை அதிகரிப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களுடைய உடல், மனது மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.