ஒருநாள் போட்டி: முதல் முறையாக டக் அவுட் - வாய்ப்பை விட்ட இந்திய வீரர்
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் முதல் முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் மிச்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி சூர்யகுமார் யாதவ் பெவிலியனுக்கு நடையை கட்டினார்.
மைதானத்தின் நாலாபுறமும் அசால்ட்டாக பந்துகளை பறக்க விடும் சூர்யகுமார் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக திகழ்கிறார். வெறும் 48 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 46.53 ஆவரேஜுடன், 175.76 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 1,675 ரன்கள் குவித்துள்ளார்.
டக் அவுட்
இப்படி டி20 கிரிக்கெட்டில் வெளுத்து கட்டும் சூர்யகுமார் 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பொறுமையின்றி அதிரடியாக ஆடி விக்கெட்டை கொடுத்து விடுகிறார்.
ஆரம்பத்தில் பிட்ச்சின் தன்மையை கணித்து பொறுமையாக இருந்தால் போகப்போக ரன் அடிக்க பிட்ச் கைகொடுக்கும். இந்த தவறைத் தான் அவர் செய்வதாக ரசிகர்கள் புலம்புகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.