விசித்திர சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ் - குவியும் வாழ்த்துக்கள்..!
இந்தியா - ஆஸ்திரேலிய 2வது நாள் டெஸ்ட் தொடர்
இதற்கான முதல் போட்டி இன்று முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
விசித்திர சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்
நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும், 30 வயதை கடந்த பின் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது 32 வயதில் அறிமுகமாகியுள்ளார். 2021ம் ஆண்டு டி20, ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானபோது அவருக்கு வயது 30 என்பது குறிப்பிடத்தக்கது.
Then - Started his T20I career with a boundary.
— CricTelegraph (@CricTelegraph) February 10, 2023
Now - Started his Test career with a boundary.
Suryakumar Yadav doing Suryakumar Yadav things ?#Cricket #INDvAUS #SuryakumarYadav #TeamIndia pic.twitter.com/4RXivmWrD8